கோவில் காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை
குடும்ப தகராறில் கோவில் காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவில் காவலாளி
கரூர் தாந்தோணிமலை தெற்கு தெருவை சேர்ந்தவர் மாதவன் (வயது 45). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கோவிலில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி மீனா. இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் 2 பேரும் கடந்த 3 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதனால் தனிமையில் வாழ்ந்து வந்த மாதவன் மனமுடைந்து காணப்பட்டார்.
தற்கொலை
இந்தநிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் மாதவனை மீட்டு சிகிச்சைக்காக கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாதவனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. இந்த தற்கொலை குறித்த புகாரின்பேரில், தாந்தோணிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.