டெம்போ மோதி ஆசிரியை பலி
அஞ்சுகிராமத்தில் டெம்போ மோதி ஆசிரியை பலியானார்.
அஞ்சுகிராமம்,
அஞ்சுகிராமத்தில் டெம்போ மோதி ஆசிரியை பலியானார்.
இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
ஆசிரியை
அஞ்சுகிராமம் அருகே நெல்லை மாவட்டம் லெவிஞ்சிபுரம் சாலை புதூரை சேர்ந்தவர் ரமேஷ். இவர் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுதாமதி (வயது47). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சுதாமதி ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
இவர் நேற்று மாலையில் தனது உறவினரான ஆதிலிங்கம் என்பவருடன் அஞ்சுகிராமத்தில் இருந்து வழுக்கம்பாறை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
டெம்போ மோதி பலி
அஞ்சுகிராமம் மேற்கு பஜாரில் வந்த போது எதிரே பாறை பொடி ஏற்றிவந்த டெம்போ மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் கீழே விழுந்தனர். சுதாமதி ெடம்போவின் அடிப்பகுதியில் சிக்கி சம்பவ இடத்தில் பலியானார். உறவினர் ஆதிலிங்கத்திற்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் அவரை மீட்டு சுசீந்திரம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அஞ்சுகிராமம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுதாமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கால்வாயில் கவிழ்ந்து கிடந்த டெம்போவை மீட்பு வாகனம் மூலம் மீட்டு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இந்த விபத்து தொடர்பாக டெம்போ டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.