பூதப்பாண்டி அருகே விநாயகர் சிலையுடன் பள்ளத்தில் கவிழ்ந்த டெம்போ


பூதப்பாண்டி அருகே விநாயகர் சிலையுடன் பள்ளத்தில் கவிழ்ந்த டெம்போ
x

பூதப்பாண்டி அருகே விநாயகர் சிலையுடன் டெம்போ பள்ளத்தில் கவிழ்ந்தது.

கன்னியாகுமரி

அழகியபாண்டியபுரம்:

பூதப்பாண்டி அருகே விநாயகர் சிலையுடன் டெம்போ பள்ளத்தில் கவிழ்ந்தது.

தோவாளை ஒன்றிய பகுதியில் நேற்று மாலையில் விநாயகர் சிலை ஞாலம் பகுதியில் உள்ள பள்ளிகொண்டான் அணையில் கரைப்பதற்காக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இதில் பூதப்பாண்டி உச்சிமாகாளி அம்மன் கோவில் பகுதியில் பூஜைக்கு வைக்கப்பட்ட விநாயகர் சிலையும் டெம்போவில் ஊர்வலகமாக கொண்டு செல்லப்பட்டது. கண்டன்குழி பகுதியில் சென்றபோது திடீரென டெம்போ நிலைதடுமாறி சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சிலைக்கும், டெம்போவில் இருந்தவர்களுக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாகர்கோவில் துணை சூப்பிரண்டு நவீன்குமார், பூதப்பாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் ஆகியோர் முன்னிலையில் டெம்போவை பள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டது. பின்னர் டெம்போவில் இருந்த விநாயகர் சிலை எடுத்துச் செல்லப்பட்டு பள்ளிக்கொண்டான் அணையில் கரைக்கப்பட்டது.


Next Story