ஆற்று மணலை கடத்த முயன்ற டெம்போ பறிமுதல்
ஆற்று மணலை கடத்த முயன்ற டெம்போ பறிமுதல்
குலசேகரம்:
திற்பரப்பு சேக்கல் ஆற்றுக்கடவு பகுதியில் கோதையாற்றில் இருந்து மணலை அள்ளி பிளாஸ்டிக் சாக்குகளில் கட்டி டெம்போவில் கடத்த முயற்சி நடப்பதாக குலசேகரம் போலீஸ் நிலையத்துக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசாரை கண்டதும் டெம்போவில் இருந்து 2 பேர் இறங்கி தப்பியோடி விட்டனர். இதையடுத்து போலீசார் டெம்போவை சோதனை செய்தனர். சோதனையில் சுமார் 100 பிளாஸ்டிக் மூடைகளில் மணல் நிரப்பப்பட்டு இருந்தது. பின்னர், போலீசார் டெம்போவுடன் மணலை பறிமுதல் செய்து குலசேகரம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். விசாரணையில் தப்பியோடியது டெம்போ உரிமையாளரான களியல் பகுதியைச் சேர்ந்த சுனில் (வயது35), டிரைவர் கிலாத்தூர் பகுதியைச் சேர்ந்த அனிஷ் (25) என்பதும், ஆற்றில் இருந்து மணலை அள்ளி கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் ேதடி வருகிறார்கள்.