ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தற்காலிக வாரச்சந்தை
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தற்காலிக வாரச்சந்தை
திருப்பூர்
வெள்ளகோவில்
வெள்ளகோவில் நகராட்சிக்கு சொந்தமான வாரச்சந்தையை வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் தங்களது விளை பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனறர். இங்கு வெள்ளகோவில் பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் வடமாநிலத்தில் இருந்து வந்து வெள்ளகோவில் பகுதியில் தங்கி வேலை செய்து வரும் மில் தொழிலாளர்கள் தங்களுக்கு தேவையான ஒரு வாரத்திற்கான மளிகை மற்றும் காய்கறிகளை வாங்கி பயன் பெற்று வந்தனர்.,
இந்நிலையில் வாரச்சந்தை வளாகத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தினசரி மார்க்கெட் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் தற்காலிகமாக வெள்ளகோவில் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று இரண்டாவது வாரமாக வாரச்சந்தை செயல்பட்டது., இதில் வழக்கம்போல் விவசாயிகள் பொதுமக்கள் வியாபாரிகள் வந்திருந்தனர்.
Related Tags :
Next Story