ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற இளைஞர் காங்கிரசை சேர்ந்த 10 பேர் கைது


ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற இளைஞர் காங்கிரசை சேர்ந்த 10 பேர் கைது
x

ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற இளைஞர் காங்கிரசை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டார்.

கரூர்

மத்திய அரசு கொண்டு வந்த அக்னிபத் திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி இளைஞர் காங்கிரஸ் சார்பில் குளித்தலையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குளித்தலை ரெயில் நிலையம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இளைஞர் காங்கிரசின் இளைஞரணி மாநில பொது செயலாளர் கவிதா சரவணன் தலைமை தாங்கினார். சட்டமன்ற தொகுதி துணை தலைவர் சேதுபதி முன்னிலை வகித்தார். இதில் அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குளித்தலை ரெயில் நிலையத்திற்குள் நுழைந்து மறியல் செய்ய முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த குளித்தலை போலீஸ் துணை சூப்பிரண்டு ஸ்ரீதர் தலைமையிலான போலீசார் அவர்களைத் தடுத்து கைது செய்தனர். இதில் 7 பெண்கள் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.


Next Story