தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை


தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
x

15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

சிறுமி பாலியல் பலாத்காரம்

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள வாழ்க்கை புது காலனியை சேர்ந்தவர் சிவசாமி. இவருடைய மகன் கணபதி (வயது 28). கட்டிட சென்ட்ரிங் தொழிலாளி. இவர் 2014-ம் ஆண்டு மே மாதம் 25-ந்தேதி வாழ்க்கை கிராமத்திலுள்ள ஆற்று பகுதியில் சென்று கொண்டு இருந்தார்.அப்போது அங்கு குளிப்பதற்காக 15 வயது சிறுமி வந்தார். இதையடுத்து கணபதி, அந்த சிறுமியை தூக்கிச்சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து சிறுமி கபிஸ்தலம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் அப்போதைய பாபநாசம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகாராணி வழக்குப்பதிவு செய்து கணபதியை கைது செய்தார்.

10 ஆண்டுகள் சிறை தண்டனை

இது தொடர்பான வழக்கு தஞ்சையில் உள்ள போக்சோ கோர்ட்டில் நடந்து வந்து. இந்த வழக்கில் 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம்1 8-ந்தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை நீதிபதி ஜி.சுந்தரராஜன் விசாரித்து கணபதிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.35 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அபராதம் கட்ட தவறினால் மேலும் 1 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்குமாறு, அரசுக்கு கோர்ட்டு பரிந்துரை செய்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சசிரேகா ஆஜராகி வாதாடினார்.


Next Story