குத்தகை விவசாயிகள் சங்க தெருமுனை பிரசார கூட்டம்
கோட்டூரில் குத்தகை விவசாயிகள் சங்க தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.
கோட்டூர்:
கோட்டூரில் குத்தகை விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கைகள் விளக்க தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு விவசாயிகளின் கூட்டு இயக்க தலைவர் ராவணன் தலைமை தாங்கினார். செயலாளர் தனபால் முன்னிலை வகித்தார். மழை, புயல் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களால் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே குத்தகை பாக்கி நிலுவையில் உள்ள விவசாயிகளுக்கு அந்தந்த ஆண்டிற்கான நெல் விலையை கணக்கிட்டு குத்தகைப்பாக்கி நிலுவைத் தொகையை வசூல் செய்திட வேண்டும். இயற்கை பேரிடர் கால தள்ளுபடி வழங்க வேண்டும். குத்தகை விவசாயிகள் பலர் இறந்துவிட்ட நிலையில் ஆர்.டி.ஆர் குத்தகை பதிவினை விசாரணை செய்து ஆதாரங்களின் அடிப்படையில் குத்தகை விவசாயிகளை அங்கீகாரம் செய்திட வேண்டும். ஒரு மூட்டை நெல் என்பது 24 மரக்கால் கணக்கில் 52 கிலோ எடை இருக்கும் எனவே 60 கிலோவுக்கு பதிலாக ஒரு மூட்டை 52 கிலோ என்று கணக்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.