ரூ.3 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்


ரூ.3 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்
x
திருப்பூர்


சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் சுமார் 17 விவசாயிகள் கலந்து கொண்டு 130 மூட்டை நிலக்கடலையை ஏலத்திற்கு கொண்டு வந்து இருந்தனர். சேவூர் சுற்று வட்டார வியாபாரிகள் 3 பேர் கலந்து கொண்டு மறைமுக ஏலத்தின் வாயிலாக குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக்கடலை ரூ.7ஆயிரத்து 100 முதல் ரூ.7 ஆயிரத்து 300 வரையிலும், 2-ம் ரக நிலக்கடலை ரூ.6 ஆயிரத்து 500 முதல் ரூ.7 ஆயிரம் வரையிலும், 3-ம் ரக நிலக்கடலை ரூ.6 ஆயிரத்து 100 முதல் ரூ.6 ஆயிரத்து 300 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.3 லட்சத்திற்கு ஏலம் நடைபெற்றது.


Next Story