தென்கரை உச்சி மகா காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
சோழவந்தான் அருகே தென்கரை கிராமத்தில் வைகைக்கரையில் உள்ள ஆதி காலத்து உச்சி மகாகாளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
மதுரை
சோழவந்தான்,
சோழவந்தான் அருகே தென்கரை கிராமத்தில் வைகைக்கரையில் உள்ள ஆதி காலத்து உச்சி மகாகாளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி நேற்று அதிகாலை தென்கரை அகிலாண்டஈஸ்வரி சமேத ஸ்ரீமூலநாதர் கோவில் அர்ச்சகர் நாகேஸ்வரசிவம், செந்தில் ஆகியோர் தலைமையில் யாகபூஜை நடந்தது. இதைத் தொடர்ந்து மேளதாளத்துடன் புனித நீர் குடங்களை எடுத்து கோவிலை வலம் வந்தனர். அதன்பின்னர் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தென்கரை கிராம மக்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story