தென்காசி புகார் பெட்டி


தென்காசி புகார் பெட்டி
x
தினத்தந்தி 26 Jan 2023 12:15 AM IST (Updated: 26 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி புகார் பெட்டி

தென்காசி

இயங்காத கெடிகாரம்

தென்காசி மாவட்டம் செங்கோட்டை பஸ் நிலையத்தில் உள்ள ராட்சத கெடிகாரம் கடந்த சில மாதங்களாக இயங்காமல் காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் கிராமப்புறங்களில் இருந்து வரும் பாமர மக்கள் நேரம் தெரியாமல் அவதிப்படுகின்றனர். எனவே பஸ் நிலையத்தில் கெடிகாரம் மீண்டும் இயங்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-கனியமுதன், செங்கோட்டை.

சுகாதாரக்கேடு

சிவகிரி பேரூராட்சி 15-வது வார்டு அண்ணா வாழையடி தெருவில் பாதி தூரத்துக்குதான் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் அங்கு வாறுகால் அமைக்காததால், தெருவில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே தெரு முழுவதும் சாலை அமைப்பதுடன் வாறுகால் அமைக்கவும் அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

-குட்டிதுரை, சிவகிரி.

சேதமடைந்த சாலை

கீழப்பாவூர் யூனியன் ஆவுடையானூரில் இருந்து கீழப்பாவூர் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

-திருக்குமரன், கடையம்.

பெயர் பலகையை சூழ்ந்த புதர்

கடையம் யூனியன் முதலியார்பட்டி பஞ்சாயத்து எல்லையான ரவணசமுத்திரம் ரெயில்வே கேட் அருகில் சாலையோரம் உள்ள பெயர் பலகையை மறைக்கும் அளவுக்கு புதர்கள் சூழ்ந்து கிடக்கின்றன. எனவே புதர்களை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

-அம்ஜத், முதலியார்பட்டி.

சாலையின் நடுவில் பள்ளம்

கடையம் மெயின் ரோட்டில் மேல மரக்கடை அருகில் சாலையின் நடுவில் ராட்சத பள்ளம் உள்ளது. இதனால் இரவில் அந்த வழியாக வேகமாக செல்லும் வாகனங்கள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகின்றன. எனவே சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

-ராமமூர்த்தி, கடையம்.



Next Story