தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் எச்சரிக்கை


தென்காசி மாவட்ட போலீஸ்  சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் எச்சரிக்கை
x
தினத்தந்தி 19 Oct 2022 12:15 AM IST (Updated: 19 Oct 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

பள்ளி மாணவன் தற்கொலை விவகாரத்தில் வன்முறையை தூண்ட முயற்சி செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்

தென்காசி

தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட அரியநாயகிபுரம் இந்து நாடார் உறவின்முறை பள்ளியில் படித்து வந்த 7-ம் வகுப்பு மாணவர் சீனு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள பொதுமக்களை சட்டவிரோத செயல்களில் ஈடுபட தூண்டும் விதமாக, அனைவரும் கலவரத்தில் இறங்குவோம் என்றும், போலீஸ் நிலையத்தை தீயிட்டு கொளுத்துவோம் என்றும், பொதுமக்களை தூண்டிவிட்டு சட்ட ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த முயன்ற தமிழ் புலிகள் கட்சியை சேர்ந்த விருதுநகர் மாவட்டம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த கணேசன் மகன் கனகராஜ் என்பவர் வீடியோ ஆதாரங்களின்படி போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

தொடர்ந்து வீடியோ பதிவுகளின் அடிப்படையில், இது போன்ற வன்முறையை தூண்டும் செயலில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Next Story