கோவில்பட்டி அருகே கருவாட்டு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து...!


கோவில்பட்டி அருகே கருவாட்டு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து...!
x

கோவில்பட்டி அருகே உள்ள கருவாட்டு தொழிற்சாலையில் பற்றி தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவில்பட்டி,

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பங்களா தெருவை சேர்ந்தவர் அந்தோணி அரசாங்க மணி (வயது 49). இவர் சிவந்திபட்டி - தீத்தாம்பட்டி சாலையில் கருவாடு ஆலை மற்றும் குடோன் வைத்துள்ளார். இங்கிருந்து கருவாட்டினை சுத்தப்படுத்தி கோழி தீவனத்திற்கு அனுப்பி வைத்து வருகிறார்.

இந்நிலையில் இன்று காலையில் கருவாட்டு குடோன் பகுதியில் திடீரென தீ பற்றி எரிந்து கரும்புகைவுடன் வெளியேறி வருவதை பார்த்த அப்பகுதிமக்கள் கொப்பம்பட்டி போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து கோவில்பட்டி தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

3 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் குடோனில் இருந்த கருவாடு மூடைகள், மினி லாரி, எந்திரங்கள் மற்றும் கட்டிட சுவர்கள் சேதமடைந்துள்ளன.

சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்து உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story