பூந்தமல்லி: மெட்ரோ ரயில் தடம் அமைக்கும் பணியில் பயங்கர தீ..!


பூந்தமல்லி: மெட்ரோ ரயில் தடம் அமைக்கும் பணியில் பயங்கர தீ..!
x

பூந்தமல்லி அருகே மெட்ரோ ரயில் தடம் அமைக்கும் பணியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக அங்கிருந்த வடமாநில தொழிலாளர்கள் உயிர் தப்பினர்.

திருவள்ளூர்

பூந்தமல்லி:

பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியில் மெட்ரோ ரயில் பணிகளுக்காக சாலையின் இருபுறங்களிலும் இரும்பு தடுப்புகள் அமைப்பதற்கான செட்டுகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இங்கு ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதனால் அங்கிருந்த வடமாநில தொழிலாளர்கள் அலறி யடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதுகுறித்து தீயணைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து மதுரவாயல், பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அந்த பகுதியில் அதிக அளவில் மரக்கட்டைகளை ரசாயனப் பொருட்களும் இருந்ததால் தீ கொழுந்து விட்டு எரிந்தது. சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து அங்கிருந்த வடமாநில தொழிலாளர்கள் அலறியடித்தபடி வெளியே ஓடிவந்தனர். உரிய பாதுகாப்பு வசதிகள் ஏதுமில்லாமல் ஊழியர்கள் வேலை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தீ குறித்து தகவல் உரிய நேரத்தில் தெரிய வந்ததால் அங்கிருந்த 10-க்கும் மேற்ப்பட்ட வடமாநில தொழிலாளர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.


Next Story