தேனி வனப்பகுதியில் பயங்கர தீ:அணைக்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரம்


தேனி வனப்பகுதியில் பயங்கர தீ:அணைக்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரம்
x
தினத்தந்தி 19 Feb 2023 12:15 AM IST (Updated: 19 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தேனி அருகே வனப்பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

தேனி

தேனி அருகே பூதிப்புரம் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டது. வனத்துறையினர் ஒரு நாள் முழுவதும் போராடி தீயை அணைத்தனர். இந்நிலையில், தேனி வீரப்ப அய்யனார் கோவில் மலைப்பகுதியில் நேற்று பகலில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ சிறிது நேரத்தில் வேகமாக வனப்பகுதியில் பரவியது. சுமார் 2 கிலோமீட்டர் தூரத்துக்கு தீப்பற்றியது. தகவல் அறிந்ததும் தேனி வனத்துறையினர் சம்பவ இடம் நோக்கி விரைந்தனர். சம்பவ இடத்துக்கு தேனி வழியாக செல்லும் பாதை என்பது ஆபத்தான செங்குத்தான ஏற்றங்கள் நிறைந்த பகுதியாகும். இதனால், பெரியகுளம் வழியாக அகமலைக்கு சென்று அங்கிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரம் நடந்து சம்பவ இடத்துக்கு வனத்துறையினர் சென்றனர். அங்கு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இரவு வரை தீயை அணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து தீ வேகமாக பரவியதால் தீயை அணைக்க முடியாமல் வனத்துறையினர் தவித்தனர்.


Related Tags :
Next Story