திருப்பரங்குன்றத்தில் பயங்கரம்: கொத்தனார் சரமாரி வெட்டிக்கொலை -3 பேருக்கு வலைவீச்சு


திருப்பரங்குன்றத்தில் பயங்கரம்: கொத்தனார் சரமாரி வெட்டிக்கொலை -3 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 3 Feb 2023 2:19 AM IST (Updated: 3 Feb 2023 2:51 AM IST)
t-max-icont-min-icon

முன்விரோதத்தால் கொத்தனார் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

மதுரை

திருப்பரங்குன்றம்

முன்விரோதத்தால் கொத்தனார் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

கொத்தனார்

மதுரை திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள தென்பரங்குன்றத்தில் வசித்து வந்தவர் சுரேஷ் (வயது 39). கொத்தனார். இவர் நேற்று முன்தினம் இரவில் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

நிலையூர் பிரிவு பகுதியில் சென்றபோது 3 பேர் பயங்கர ஆயுதங்களுடன் வந்து சுரேசை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டினர். அதில் ரத்த வெள்ளத்தில் சுரேஷ் மயங்கி விழுந்து உயிருக்கு போராடினார்.

வெட்டிக்கொலை

உடனே அந்த 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இந்த நிலையில் உயிருக்கு போராடிய சுரேசை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு திருப்பரங்குன்றம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதல் உதவி அளித்து மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே சுரேஷ் பரிதாபமாக இறந்தார். .இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பரங்குன்றம் போலீசார் விரைந்து வந்து, சுரேஷ் உடலை பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

3 பேருக்கு வலைவீச்சு

போலீசார் நடத்திய விசாரணையில் சுரேசுக்கும், தென்பரங்குன்றத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி தீனதயாளன் (32) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தீனதயாளன் தனது நண்பர்களான விக்னேசுவரன், சிங்கராஜா ஆகியோருடன் சேர்ந்து சுரேசை வழிமறித்து பயங்கர ஆயுதங்களால் வெட்டிக்கொன்றது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து தீனதயாளன், விக்னேசுவரன், சிங்கராஜா ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சுரேஷ் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story