விதைகளை பரிசோதித்து விற்பனை செய்யுங்கள் விற்பனையாளா்களுக்கு அதிகாரி அறிவுரை


விதைகளை பரிசோதித்து விற்பனை செய்யுங்கள் விற்பனையாளா்களுக்கு அதிகாரி அறிவுரை
x
தினத்தந்தி 23 Jun 2023 12:15 AM IST (Updated: 23 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் விதைகளை பரிசோதித்து விற்பனை செய்யுங்கள் என விற்பனையாளர்களுக்கு அதிகாரி அறிவுரை வழங்கி உள்ளார்.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட விவசாயிகள், விதை உற்பத்தியாளர்கள், விதை விற்பனையாளர்கள் கவனத்திற்கு, தாங்கள் உற்பத்தி செய்த விதைகள் அல்லது சாகுபடிக்கு பயன்படுத்த உள்ள விதைகள் அல்லது வினியோகத்திற்கு பயன்படுத்த உள்ள விதைகளை பரிசோதனை செய்து பயன்படுத்தலாம். விதை உற்பத்திக்கு பயன்படுத்தும் விதை குவியலில் பிற ரகங்களின் கலப்பு குறிப்பிடப்பட்ட அளவுக்கு மேல் இருந்தால் அடுத்த பருவத்தில் பயன்படுத்தும்போது ஒன்றுக்கும் மேற்பட்ட ரகங்களின் கலவையால் பூக்கும் பருவம், பயிர்களின உயரம், அறுவடை காலம் ஆகியவை மாறுபட்டு இருக்கும். எனவே கலப்பில்லாத தரமான விதை உற்பத்தி செய்ய உற்பத்திக்கு பயன்படுத்தும் விதையில் பிற ரக கலப்பின் விகிதம் அனுமதிக்கப்படும். அளவிற்குட்பட்டு இருப்பதை அறிந்து பயன்படுத்த வேண்டும்.

கட்டணம்

தங்களிடம் இருப்பு வைக்கப்பட்டுள்ள விதைகளில் இருந்து மாதிரி எடுத்து அளித்தால் விதையின் புறத்தூய்மை, ஈரப்பதம், பிற ரக கலப்பு மற்றும் முளைப்புத்திறன் ஆகியவை பரிசோதனை செய்து முடிவுகள் வழங்கப்படும். விதை விற்பனையாளர்கள், தங்களிடம் உள்ள விதைகளின் தரத்தை அறிந்து நம்பகத்தன்மை கெடாமல் வியாபாரம் செய்ய தங்களிடம் உள்ள அனைத்து விதைகளையும் பரிசோதித்து பின்னர் விற்பனை செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஒரு விதை மாதிரிக்கு ரூ.80 மட்டுமே பரிசோதனை கட்டணம் செலுத்தி பரிசோதனை செய்து விழுப்புரம் விதை பரிசோதனை நிலையத்தின் சேவையை பயன்படுத்தி பயன்பெறலாம்.

இந்த தகவலை விழுப்புரம் விதை பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர் சந்தோஷ்குமார் தெரிவித்துள்ளார்.


Next Story