கரூரில் ஜவுளி ஏற்றுமதியாளர்கள் சங்க கூட்டம்
கரூரில் ஜவுளி ஏற்றுமதியாளர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது.
கரூர்
கரூரில் ஜவுளி ஏற்றுமதியாளர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் மெட்ரோ கோபால கிருஷ்ணன் தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர் அட்லஸ் நாச்சிமுத்து, மத்திய ஜவுளித்துறை கூடுதல் செயலாளர் ரோஹித் கன்சல், இணைசெயலாளர் வெர்மா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதையடுத்து, கரூர் ஜவுளி தொழில் பற்றிய படக்காட்சி தொகுப்பு வெளியிடப்பட்டது. அப்போது ஜவுளி ஏற்றுமதி தொழில் முதன் முதலாக கைத்தறியில் ஆரம்பித்து இப்போது உள்ள தானியங்கி தறி வரை உள்ள விவரம் எடுத்துரைக்கப்பட்டது. பின்னர் 2030-ம் ஆண்டு ஜவுளி வியாபாரம் ரூ.25 ஆயிரம் கோடி உற்பத்தி அடைய வேண்டி ஜவுளி தொழிலுக்கு என்னென்ன திட்டங்கள், சவால்கள், சங்கடங்கள், அரசிடமிருந்து எதிர்பார்க்கின்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை மத்திய அரசு அதிகாரிகளிடம் வழங்கப்பட்டன. இதில், ஏற்றுமதியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story