தச்சநல்லூர் மண்டல வார்டு குழு கூட்டம்


தச்சநல்லூர் மண்டல வார்டு குழு கூட்டம்
x

தச்சநல்லூர் மண்டல வார்டு குழு கூட்டம் தலைவர் ரேவதி பிரபு தலைமையில் நடந்தது.

திருநெல்வேலி

நெல்லை மாநகராட்சி தச்சநல்லூர் மண்டல வார்டு குழு கூட்டம் நடந்தது. தலைவர் ரேவதி பிரபு தலைமை தாங்கினார். செயற்பொறியாளர் வாசுதேவன், உதவி செயற்பொறியாளர் லெனின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் கலந்து கொண்டு தங்களது வார்டு பகுதியில் சாலை அமைத்து தர வேண்டும். கழிவு நீர் ஓடை அமைத்து தர வேண்டும். பூங்கா அமைத்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். இந்த கூட்டத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்தல், கழிவுநீர் ஓடை அமைத்தல், பள்ளிக்கூடத்திற்கு கழிவறை அமைத்தல், பயணிகள் நிழற்குடை அமைத்தல் உள்ளிட்ட பணிகளை செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Next Story