தைக்கால் கந்தூரி விழா
நாகூா் தைக்கால் கந்தூரி விழா நடந்தது.
நாகப்பட்டினம்
நாகூர்:
நாகூர் கலிபா சாஹிப் தெருவில் தோழை சாஹிப் தைக்கால் உள்ளது. இந்த தைக்காலில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தைக்காலில் இருந்து குதிரையில் கொடியை வைத்து. ஊர்வலமாக கால்மாட்டுதெரு, ஜடையினா ஹாஜியார் தெரு, நீயூ பஜார் லைன் உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் தைக்காலில் வந்தடைந்தது. தைக்கால் டிரஸ்டி மகமுது சாஹிப் துவா ஓதிய பிறகு கொடியேற்றப்பட்டது. இதில் திரளாக இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். முக்கிய நிகழ்ச்சியான சந்தனம் பூசும் விழா வருகிற 10-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு நடைபெறுகிறது.
Related Tags :
Next Story