சுப்பிரமணியசுவாமி கோவிலில் தைப்பூச விழா
கொரடாச்சேரி அருகே எண்கண் சுப்பிரமணியசுவாமி கோவிலில் தைப்பூச விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொரடாச்சேரி:
கொரடாச்சேரி அருகே எண்கண் சுப்பிரமணியசுவாமி கோவிலில் தைப்பூச விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சுப்பிரமணியசுவாமி கோவில்
கொரடாச்சேரி அருேக எண்கண் கிராமத்தில் 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் தைப்பூச திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக சிங்காரவேலர், வள்ளி-தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பிரகார உலா நடந்தது. பின்னர் 30 அடி கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தைப்பூச விழா
தைப்பூச விழா 13 நாட்கள் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசம் அடுத்த மாதம்(பிப்ரவரி) 4-ந்தேதி நடக்கிறது. விழாவையொட்டி தினந்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் சாமி வீதி உலா நடைபெறும். அடுத்த மாதம் 2-ந்தேதி காலை 10 மணிக்கு பல்லக்கு வெண்ணைத்தாழியும், இரவு 9 மணிக்கு வெட்டுங்குதிரை வாகன வீதி உலாவும் நடைபெறுகிறது. 3-ந் தேதி கோவில் தேரோட்டமும், 4-ந் தேதி தைப்பூச திருவிழாவும் நடக்கிறது.