தைப்பூச திருவிழா தொடக்கம்
பண்பொழி திருமலைக்குமாரசாமி கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தென்காசி
கடையநல்லூர்:
தென்காசி மாவட்டத்தில் உள்ள பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழாவானது வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். 10 நாட்கள் நடைபெறும் இந்த தைப்பூச திருவிழாவில் நாள்தோறும் பல்வேறு அலங்காரத்துடன் முருகன், பக்தர்களுக்கு அருள்புரிவார்.
அந்த வகையில், இந்த வருடத்திற்கான தைப்பூச திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, திருமலை குமாரசுவாமி கோவிலில் இருந்து முருகர் ஊர்வலமாக மேள, தாளங்கள் முழங்க அழைத்து வரப்பட்டு நகரீஸ்வரமுடையார் கோவில் வளாகத்தில் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தினர். சுமார் 101 அடி உயரமுள்ள அன்னக்கொடிக்கம்பத்தை பக்தர்கள் நான்கு புறமும் கயிறு கட்டி இழுத்து நட்டினர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story