மகனுடன் மோட்டார்சைக்கிளில் சென்ற பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு


மகனுடன் மோட்டார்சைக்கிளில் சென்ற பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு
x

மகனுடன் மோட்டார்சைக்கிளில் சென்ற பெண்ணிடம் மர்ம நபர்கள் தாலி செயினை பறித்துசென்றனர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த ஜோதிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சாவித்திரி (வயது 48). இவர் அருகே உள்ள கூடலூரில் நேற்று முன்தினம் வாரச்சந்தையில் வீட்டுக்கு தேவையான காய்கறிகள் வாங்கி கொண்டு அவரது மகன் சதீஷ் உடன் இருசக்கர வாகனத்தில் ஜோதிபுரத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

ஜோதிபுரம் பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்மநபர்கள் திடீரென சாவித்திரி கழுத்தில் அணிந்திருந்த தாலி செயினை பறித்துள்ளனர். அதில் சுமார் 4 பவுன் செயின் மட்டும் மர்ம நபர்கள் கையில் சிக்கி உள்ளது. அந்த செயினுடன் மர்ம நபர்கள் தப்பி சென்றுவிட்டனர். இது குறித்து சோளிங்கர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story