பா.ஜனதா தலைவர்களின் சொத்து பட்டியலையும் வெளியிட வேண்டும்- தமிமுன் அன்சாரி


பா.ஜனதா தலைவர்களின் சொத்து பட்டியலையும் வெளியிட வேண்டும்- தமிமுன் அன்சாரி
x

பா.ஜனதா தலைவர்களின் சொத்து பட்டியலையும் வெளியிட வேண்டும் என தமிமுன் அன்சாரி கூறினார்.

தஞ்சாவூர்

கும்பகோணத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தங்களுடைய கட்சியின் கொள்கைகளை மக்களிடம் தெரிவித்து நேர்மையான முறையில் வளர வேண்டும் என்பது பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலையின் அரசியல் கிடையாது. மாறாக எதிர் தரப்பினர் மீது சகட்டுமேனிக்கு விமர்சனங்களை முன்வைத்து அதன் மூலமாக பரபரப்பை ஏற்படுத்தி தன் மீது அனைவரது கவனத்தையும் ஈர்ப்பதை அவர் வாடிக்கையாக கொண்டுள்ளார். தி.மு.க.வினரின் சொத்து பட்டியல் என கூறி ஒரு பட்டியலை வெளியிட்டுள்ள அண்ணாமலை பா.ஜனதா கட்சித் தலைவர்களின் சொத்து பட்டியலையும் வெளியிட வேண்டும். தான் சார்ந்துள்ள கட்சி தலைவர்கள் சொத்து பட்டியலையும், தோழமை கட்சியினரின் சொத்து பட்டியலையும் வெளியிட்டிருந்தால் அண்ணாமலையின் அணுகுமுறையை நேர்மையான அணுகுமுறையாக கருத வாய்ப்புள்ளது. எனவே அண்ணாமலை பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர்களின் சொத்து பட்டியலையும் வெளியிட வேண்டும். நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் சித்தாந்த ரீதியான அரசியல் போராட்டமாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story