தங்கம்மன் கோவில் கொடை விழா
தங்கம்மன் கோவில் கொடை விழா நடந்தது.
நெல்லை வண்ணார்பேட்டை தங்கம்மன் கோவில் கொடை விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று முன்தினம் அதிகாலை 5 மணிக்கு தங்கம்மன் கோவிலில் கணபதி ஹோமம் உள்பட பல்வேறு ஹோம பூஜைகள் நடைபெற்றது.
நேற்று காலை 8 மணிக்கு குலசேகர ராஜா கோவிலில் இருந்து தங்கம்மன் சிலை அழைப்பு நிகழ்ச்சியும், 9 மணிக்கு வெற்றி வேலடி விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சியும், மதியம் அபிஷேகம், மதிய கொடையும் நடைபெற்றது.
மாலை 3.30 மணிக்கு பக்தர்கள் தாமிரபரணி ஆற்றில் இருந்து கிரகம் எடுத்து சாலைத்தெரு, வளையாபதி தெரு, சிந்தாமணி தெரு, கம்பராமாயண தெரு, வெற்றி வேலடி விநாயகர் கோவில் தெரு, திருக்குறிப்பு தொண்டர் தெரு, எட்டுத்தொகை தெரு, பத்துபாட்டு தெரு, சாலைத்தெரு, திருநீலகண்ட நாயனார் தெரு, அப்பர் சுவாமி தெரு வழியாக தங்கம்மன் கோவிலை வந்தடைந்தனர். இரவு 10 மணிக்கு அம்பாளுக்கு அலங்கார தீபாராதனையும், நள்ளிரவு 12 மணிக்கு அர்த்தசாம பூஜை, படையல் தீபாராதனையும் நடைபெற்றது. ஊர்வலம் மற்றும் நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.