"பயன்தூக்கார் செய்த உதவிக்கு அன்பைவிட நன்றியேது?" - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னையில் சீரமைப்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் துரிதமாக நடைபெற்று வருகிறது.
சென்னை,
மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேங்கியுள்ள குப்பைகள் மற்றும் தோட்டக் கழிவுகளை அகற்றி, தூய்மைப் பணிகளை மேற்கொண்ட 3,449 தூய்மைப் பணியாளர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ. 4,000 ஊக்கத்தொகை வழங்கினார்.
இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது:- "கண்ணுக்கு ஒரு இடர் என்றால் நொடிப்பொழுதில் காக்க வரும் கை போல, தலைநகர் சென்னையிலும், புறநகர் மாவட்டங்களிலும் மிக்ஜம் புயல் பாதிப்பைப் போக்கக் களம் கண்ட 3449 தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பிற பணியாளர்களுக்கு 4,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கினேன். பயன்தூக்கார் செய்த உதவிக்கு அன்பைவிட நன்றியேது?" என்று தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story