பொதுமக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு முன்னுரிமை


பொதுமக்களின் அடிப்படை   பிரச்சினைகளுக்கு முன்னுரிமை
x
திருப்பூர்


தாராபுரம் நகராட்சியில் பொதுமக்களின் அடிப்படை கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக பகுதி கிராம சபா கூட்டத்தில் நகராட்சி தலைவர் பாப்புகண்ணன் தெரிவித்தார்.

முன்னுரிமை

நகர உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நகர பகுதி கிராம சபா கூட்டம் தாராபுரம் நகராட்சியின் 6-வது வார்டு பகுதியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் 6-வது வார்டு பகுதியில் சாக்கடை வசதி, தெருவிளக்கு, முதியோர் உதவித்தொகை, உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என்று 6-வது வார்டு கவுன்சிலர் முபாரக் அலி நகராட்சி தலைவரிடம் வலியுறுத்தினார்.

இதுகுறித்து நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன் கூறுகையில், கடந்த 10 ஆண்டு காலமாக அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் சாக்கடைகள், மழை நீர் வடிகால் மற்றும் தூர்வாருதல் உள்ளிட்ட மக்கள் பிரச்சினைகள் முழுமையாக தீர்க்கப்படவில்லை. அதேபோல நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால் தான் அத்தனை பிரச்சினைக்கும் காரணமாக அமைந்துள்ளது. தற்போது தி.மு.க. ஆட்சி பதவி ஏற்ற பின்பு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முதன் முதலில் நகர்ப்புற பகுதியில் பணிகள் நடைபெற்று மக்கள் முழுமையாக பயனடைய முதலில் நகரப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என கூறினார். அது போல தேர்தலையும் நடத்தியுள்ளார். அதன்படி பொது மக்கள் பிரச்சினைகள் முழுமையாக தீர்க்கப்படும். அடிப்படை பிரச்சிைனகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றார்.

மனுக்கள் பெறப்பட்டது

அப்போது நகராட்சி தலைவர் மற்றும் நகர செயலாளர் எஸ். முருகானந்தம் ஆகியோர் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டனர். மனுக்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்தனர்.

நகர துணை செயலாளர் வெ.கமலக்கண்ணன். 5வது வார்டு பிரதிநிதி நாசர் உசேன், 6வது வார்டு சபா பகுதி உறுப்பினர்கள் 6வது வார்டு கிளை செயலாளர் அக்பர் பாஷா, மு.சை. இப்ராஹிம், ஜாபர் சாதிக், அல்லிமா பீவி, நகராட்சி பணியாளர்கள், 6வது வார்டு கிளைக் கழக பிரதிநிதிகள் சாகுல் அமீது, ரமலான் பர்வீன், நகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரபிக், நகர கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சிவசங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story