காலி குடங்களுடன் பெண்கள் தர்ணா


காலி குடங்களுடன் பெண்கள் தர்ணா
x
திருப்பூர்


காங்கயம் நகராட்சி 14- வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வீட்டு உபயோக குடிநீர்க் குழாயில் தண்ணீர் சரியாக வருவதில்லை எனத் தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த பெண்கள் 30-க்கும் மேற்பட்டோர் நகராட்சி அலுவலக வளாகத்தில் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த நகராட்சி அதிகாரிகள், போலீசார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உடனடியாக குடிநீர் கிடைக்க வழிவகை செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். .


Next Story