தவுட்டுப்பாளையம் மகாமாரியம்மன் கோவில் திருவிழா


தவுட்டுப்பாளையம் மகாமாரியம்மன் கோவில் திருவிழா
x
தினத்தந்தி 28 April 2023 12:14 AM IST (Updated: 28 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தவுட்டுப்பாளையம் மகாமாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.

கரூர்

தவுட்டுப்பாளையத்தில் உள்ள மகாமாரியம்மன், பகவதி அம்மன், கருப்பண்ணசாமி கோவில்கள் திருவிழாவை முன்னிட்டு வருகிற 1-ந்தேதி தீமிதி திருவிழாவும், 2-ந்தேதி பொங்கல், மாவிளக்கு எடுத்து வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. இதையொட்டி நேற்று இரவு மகா மாரியம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து உற்சவர் மகாமாரியம்மன் யானை வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்தார். அப்போது ஒவ்வொரு வீட்டிலும் தேங்காய் பழம் உடைத்து சாமி தரிசனம் செய்தனர்.


Next Story