ஆசிரியை உதவியுடன் தேர்வு எழுதிய 2 கைகள் இல்லாத மாணவி 277 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி
மயிலாடுதுறையில் ஆசிரியை உதவியுடன் தேர்வு எழுதிய 2 கைகள் இல்லாத மாணவி 277 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்து உள்ளார்.
மயிலாடுதுறையில் ஆசிரியை உதவியுடன் தேர்வு எழுதிய 2 கைகள் இல்லாத மாணவி 277 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்து உள்ளார்.மயிலாடுதுறை,
மயிலாடுதுறை அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2 கைகளும் இல்லாத லெட்சுமி என்ற மாணவி, ஆசிரியை உதவியுடன் கடந்த மே மாதம் நடந்த 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினார்.
பிறந்தபோது 2 கைகளும் இல்லாத பெண் குழந்தை என்பதால், பெற்றோர்கள் இவரை பராமரிக்க இயலாமல் கைவிட்டதால், மயிலாடுதுறை ஆதரவற்றோர் காப்பகமான அன்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் 2 வயது குழந்தையாய் இருந்தபோதிலிருந்து அங்கு வளர்ந்து வருகிறார்.
இந்த நிலையில் தேர்வு முடிவு இன்று வெளியான நிலையில், மாணவி லட்சுமி 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். அவர் 277 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து ஆதரவற்றோர் இல்லத்தின் நிர்வாகிகள், காப்பாளர்கள் மாணவி லட்சுமிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.