தலைமறைவாக இருந்தவர் சிறையில் அடைப்பு
கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர் சிறையில் அடைக்கப்பட்டார்
திருநெல்வேலி
முக்கூடல்:
பாப்பாக்குடி போலீஸ் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு அடிதடி வழக்கில் இலுப்பைகுறிச்சி தெற்கு தெருவை சேர்ந்த முத்துக்குமார் (வயது 26) என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். பின்னர் இவர் கோர்ட்டு விசாரணைக்கு கடந்த 2 மாதமாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதனால் முத்துக்குமாருக்கு கோர்ட்டு பிடியாணை பிறப்பித்தது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்படி, பாப்பாக்குடி போலீசார், முத்துக்குமாரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி பிடியாணையை நிறைவேற்றினர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story