ஆசையாக வாங்கிய புதிய கார் ஷோரூமில் இருந்து வெளியே வந்தபோது விபத்து


ஆசையாக வாங்கிய புதிய கார் ஷோரூமில் இருந்து வெளியே வந்தபோது விபத்து
x

ஆசையாக வாங்கிய புதிய கார் ஷோரூமில் இருந்து வெளியே வந்தபோது மற்றொரு கார், பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே உள்ள இரட்டைமலை சீனிவாசன் தெருவை சேர்ந்தவர் மோசஸ் தினகரன். இவரது மனைவி யாமினி ஜான்சிராணி (வயது 36). இவர்கள் நேற்று முன்தினம் ஜோலார்பேட்டையை அடுத்த மண்டலவாடி கூட் ரோடு பகுதியில் உள்ள கார் ஷோரூமில் ஆசையாக புதிய கார் ஒன்று வாங்கி உள்ளனர்.

புதிதாக வாங்கிய காரை மோசஸ் தினகரன் ஷோரூமில் இருந்து வெளியே ஓட்டிவந்தார். அவரது மனைவி யாமினி ஜான்சிராணி உடன் இருந்துள்ளார். ஷோ ரூமில் இருந்து வெளியே வந்தபோது அருகில் நின்ற இருந்த டெமோ கார் மீது, புதிய கார் மோதியது தொடர்ந்து சாலையோரம் நின்று கொண்டு இருந்த தனியார் கல்லூரி பஸ் மீதும் மோதியது.

இதில் காரின் முன் பக்கம் பலத்த சேதமடைந்தது. காரில் இருந்த யாமினி ஜான்சிராணிக்கு காயம் ஏற்பட்டது. அவர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த விபத்து குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய கார் ஷோரூமில் இருந்து வெளியே வந்தபோது விபத்தில் சிக்கியது அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story