சாலையில் ஆடு, மாடுகள் உலா


சாலையில் ஆடு, மாடுகள் உலா
x

சாலையில் ஆடு, மாடுகள் உலா

திருப்பூர்

போடிப்பட்டி

உடுமலை நகரப்பகுதிகளில் சாலையில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் உலா வருவதால் விபத்துக்கள் ஏற்படும் நிலை உள்ளது.

காய்கறிக் கழிவுகள்

கால்நடை வளர்ப்பு என்பது நல்ல வருவாய் ஈட்டக்கூடிய தொழிலாக உளது.குறிப்பாக ஆடுகளுக்கு நல்ல விலை கிடைத்து வருவதால் கிராமப்புறங்களில் மட்டுமல்லாமல் நகரப் பகுதிகளிலும் ஒருசிலர் அதிக எண்ணிக்கையில் ஆடுகளை வளர்த்து வருகின்றனர்.அதேவேளையில் கால்நடைகளின் தீவனத்துக்கு அதிக செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது.இதனால் ஒருசிலர் நகரப் பகுதிகளில் கால்நடைகளை அவிழ்த்து விட்டு விடுகின்றனர்.அவை நகரில் ஆங்காங்கே வீசியெறியப்படும் குப்பைகளில் உள்ள உணவு மற்றும் காய்கறிக் கழிவுகளைத் தின்று பசியாறுகின்றன.இவ்வாறு குப்பைகளில் உள்ள உணவுப்பொருட்களை மேய்வதால் அதிலுள்ள பாலிதீன் கழிவுகள் கால்நடைகளின் வயிற்றுக்குள் சென்று செரிமானக் கோளாறுகளை உருவாக்குகிறது.அதுமட்டுமல்லாமல் சில வேளைகளில் கால்நடைகள் உயிரிழக்கும் நிலையும் உருவாகிறது.ஆனாலும் கால்நடைகளை சாலைகளில் திரிய விட்டு விட்டு மாலை வேளைகளில் அவற்றை வீடுகளுக்கு ஓட்டிச்செல்லும் பழக்கம் பலரிடம் உள்ளது.

விபத்துக்கள்

இதனால் உடுமலை நகரின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த தளி சாலை, கல்பனா சாலை, ராஜேந்திரா சாலை, கபூர்கான் வீதி உள்ளிட்ட பல வீதிகளில் கால்நடைகள் ஜாலியாக உலா வருகின்றன.இவை எதிர்பாராமல் சாலையின் குறுக்கே வருவதால் வாகன ஓட்டிகள் தடுமாறி விபத்துக்குளாகும் நிலை உள்ளது.குறிப்பாக சைக்கிள்களில் வரும் பள்ளி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.சில வேளைகளில் கால்நடைகள் சாவகாசமாக நடு ரோட்டில் படுத்து விடுகின்றன.அதுபோன்ற நேரங்களில் கார், ஜீப், லாரி போன்ற வாகனங்கள் மட்டுமல்லாமல் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர கால வாகனங்கள் செல்வதிலும் சிரமம் ஏற்படுகிறது.எனவே கால்நடை வளர்ப்பவர்கள் குறித்து முழுமையான தகவல்கள் சேகரித்து அவர்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்க வேண்டும்.அதன்பிறகும் கால்நடைகளை வீதியில் திரிய விடுபவர்களுக்கு அபராதம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.



Next Story