நான்கு வழிச்சாலை இணையும் இடத்தில் அடிக்கடி விபத்து


நான்கு வழிச்சாலை இணையும் இடத்தில் அடிக்கடி விபத்து
x

நான்கு வழிச்சாலை இணையும் இடத்தில் அடிக்கடி விபத்து

திருப்பூர்

உடுமலை,

உடுமலை-பழனி தேசிய நெடுஞ்சாலையில் பாலப்பம்பட்டி பகுதியில் நான்கு வழிச்சாலை இணையும் இடத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால் வேகத்தடைகளில், வெள்ளை கோடுகளை மீண்டும் போடவேண்டும் என்று வாகன ஓட்டுனர்கள் எதிர்பார்க்கின்றனர்.

நான்கு வழிச்சாலை

மத்திய அரசின் பாரத் மாலா பிரயோஜனா திட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம், கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் கமலாபுரம் வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்படுகிறது. இந்த நான்கு வழிச்சாலை திட்டத்தில் பொள்ளாச்சி முதல் மடத்துக்குளம் வரை 50 கி.மீ, மடத்துக்குளம் முதல் ஒட்டன்சத்திரம் வரை 45. கி.மீ. மற்றும் ஒட்டன்சத்திரம் முதல் கமலாபுரம் வரை 36 கி.மீ.என மொத்தம் 131 கி.மீ.தூரத்திற்கு சாலை அமைக்க திட்டமிடப்பட்டு, கடந்த சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

நான்கு வழிச்சாலையின் ஒருபகுதிஉடுமலை-பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் கணபதிபாளையம் பிரிவுக்கு அருகில் இருந்து தொடங்குகிறது.இந்த நான்கு வழிச்சாலை குறிஞ்சேரி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் பெதப்பம்பட்டி சாலை மற்றும்சின்னவீரம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் திருப்பூர்சாலை, தாராபுரம் சாலை ஆகிய சாலைகளின் குறுக்கே கடந்து உடுமலை-பழனி தேசிய நெடுஞ்சாலையில் பாலப்பம்பட்டி அருகே வந்து இணைகிறது. பாலப்பம்பட்டிக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள நான்குவழிச்சாலை உடுமலையில் இருந்து பழனிக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சிறிது உயரமாக பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது.

அடிக்கடி விபத்துகள்

இந்த நான்கு வழிச்சாலையில் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மட்டும் அந்த நான்கு வழிச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் பாலப்பம்பட்டி அருகே சாலைகள் இணையும் பகுதியில், பழனி சாலையில்அவ்வப்போது வாகன போக்குவரத்து நெரிசல்ஏற்படுகிறது.அத்துடன் அந்த இடத்தில் சாலையின் இரண்டு புறமும் வேகத்தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

அதில் போடப்பட்டிருந்த கோடுகள் அழிந்துள்ளதால், தூரத்தில் வரும் வாகன ஓட்டுனர்களுக்கு வேகத்தடை இருப்பது தெரிவதில்லை. அருகில் வந்த பிறகே தெரிகிறது.அப்போது திடீரென்று பிரேக்போடுவதால் விபத்துகள் ஏற்படுகிறது. அதனால் அந்த வேகத்தடுப்புகளில் வெள்ளைக்கோடுகளை போட வேண்டும் என்று வாகன ஓட்டுனர்கள் எதிர்பார்க்கின்றனர்.மேலும் நான்கு வழிச்சாலையில் வரும் சிலர் அந்த இடத்தில் வலது புறமாக திரும்பும்போது, பழனி சாலையில் செல்லும் வாகனங்கள் மோதி விபத்துகள் ஏற்படுகின்றன.அதனால் அந்த இடத்தில் விபத்துகள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று வாகன ஓட்டுனர்களும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.


Next Story