இரணியல் அரசு பள்ளி ஆசிரியர் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்;கலெக்டரிடம் மனு


இரணியல் அரசு பள்ளி ஆசிரியர் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்;கலெக்டரிடம் மனு
x

இரணியல் அரசு பள்ளி ஆசிரியர் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

இரணியல் அரசு பள்ளி ஆசிரியர் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

கலெக்டரிடம் மனு

குமரி மாவட்ட அனைத்து ஆசிரியர்கள் சங்கங்கள் சார்பில் ஏராளமான ஆசிரியர்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கலெக்டர் அரவிந்தை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.

அதில் கூறியிருப்பதாவது:-

இரணியல் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி வரும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் மீது பொய்யான புகார் அளிக்கப்பட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு சில அமைப்பினரால் பரப்பப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை முறையாக விசாரித்து அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டினை ரத்து செய்து, துறை ரீதியாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். மீண்டும் அவருக்கு பணி நியமன ஆணை வழங்கிட வேண்டும். மேலும் ஆசிரியர்கள் மீது வேண்டுமென்றே பொய் குற்றச்சாட்டுகளை கூறி பள்ளிகளின் மாண்பையும் மாணவர்களின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கும் அமைப்புகளை கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story