அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு இன்று முதல்கட்ட ஆலோசனை
அ.தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்ட தேர்தல் குழுக்களின் முதல்கட்ட ஆலோசனை கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் விறுவிறுப்பை காண்பித்து வருகின்றன. தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்புகுழு என பல்வேறு குழுக்களை அரசியல் கட்சிகள் நியமித்து, தேர்தல் பணியை தொடங்கி உள்ளன.
அந்த வகையில்,அதிமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை செய்கிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், ஜெயக்குமார் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் ஆலோசனையில் ஈடுபட உள்ளனர்.
Related Tags :
Next Story