அ.தி.மு.க.வை, பா.ஜ.க.தான் இயக்குகிறது


அ.தி.மு.க.வை, பா.ஜ.க.தான் இயக்குகிறது
x

அ.தி.மு.க.வை, பா.ஜ.க.தான் இயக்குகிறது என கே.எஸ்.அழகிரி கூறினார்.

நாகப்பட்டினம்

நாகூர்:

அ.தி.மு.க.வை, பா.ஜ.க.தான் இயக்குகிறது என கே.எஸ்.அழகிரி கூறினார்.

பேட்டி

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நாகை மாவட்டம் நாகூரில் உள்ள தர்காவிற்கு நேற்று முன்தினம் இரவு வந்து பிரார்த்தனை செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

'அக்னிபத்' திட்டம் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளுக்கு ஆள் சேர்க்கும் அமைப்பு. மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டினால் தமிழக டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கும்.

அ.தி.மு.க.வை பா.ஜ.க.தான் இயக்குகிறது

மேகதாது அணை வரைவு திட்டத்திற்கு பா.ஜ.க. அரசு அனுமதி அளித்தபோது அப்போதைய அ.தி.மு.க. அரசு எதிர்த்து போராடவில்லை. இதன் விளைவைத்தான் தற்போது சந்தித்து வருகிறோம்.

அ.தி.மு.க.வை, பா.ஜ.க. தான் இயக்குகிறது. அ.தி.மு.க. தலைவர்கள் பா.ஜ.க.வின் பிடியில் இருந்து வெளியே வரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story