அ.தி.மு.க.வுக்கு ஒற்றை தலைமை வேண்டும்; முன்னாள் அமைச்சர் பேட்டி
அ.தி.மு.க.வுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் கூறினார்.
ஒற்றைத்தலைமை விவகாரத்தில் அ.தி.மு.க.வில் இரு தரப்பினரிடையே மோதலை ஏற்படுத்தியுள்ள நிலையில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க.வில் உள்ள அனைத்து நிர்வாகிகளும், ஒட்டுமொத்த தொண்டர்களும் எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வழிகாட்டுதலின்படி செயல்பட்டு வருகிறோம். தமிழகத்தின் இப்போதைய அரசியல் சூழலில் அ.தி.மு.க.வுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும். இப்போது உள்ள அராஜக தி.மு.க. ஆட்சியை வீழ்த்துவதற்கும், மீண்டும் அ.தி.மு.க. ஆட்சியை அமைப்பதற்கும் ஒற்றைத்தலைமை வேண்டும் என்பது எங்களின் ஆணித்தரமான முடிவு. அ.தி.மு.க. தொண்டர்களிடையே எந்த குழப்பமும் இல்லை. பொதுக்குழு கூட்டத்துக்கு பிறகு தீர்க்கமான முடிவு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.