"அதிமுக கட்சியினர் என்னைச் சூழ்ந்துகொண்டு கைக் குலுக்கியது நெகிழ்வாயிருந்தது" - திருமாவளவன் டுவீட்


அதிமுக கட்சியினர் என்னைச் சூழ்ந்துகொண்டு கைக் குலுக்கியது நெகிழ்வாயிருந்தது - திருமாவளவன் டுவீட்
x

அதிமுக கட்சியினர் என்னைச் சூழ்ந்துகொண்டு கைக் குலுக்கியது நெகிழ்வாயிருந்தது என்று விசிக தலைவர் திருமாவளவன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் புயலை கிளப்பி இருக்கும் நிலையில் பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் உள்ள மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் வெளியூரில் இருந்து வாகனங்களில் மூலம் வானகரத்தில் குவிந்தனர்.

இதனால் மதுரவாயல்-வானகரம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோயம்பேடு மேம்பாலத்தில் இருந்து மதுரவாயல் வரை வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதனால் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி-கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் கடும் அவதி அடைந்தனர்.

இந்த நிலையில், மதுரவாயல்-வானகரம் சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் குறித்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

"அம்மாவுக்கு உடல்நலம் சரியில்லை. வானகரம் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைக் காண அதிகாலை புறப்பட்டு சென்றேன். வானகரம் அருகே போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டேன்.

அதிமுக பொதுக்குழுவுக்கு வந்திருந்த அக்கட்சியினர் என்னைச் சூழ்ந்துகொண்டு கைக் குலுக்கியது நெகிழ்வாயிருந்தது." என்று பதிவிட்டுள்ளார்.


Next Story