நாடாளுமன்ற தேர்தலில் எங்கள் தலைமையில் தான் கூட்டணி அமையும் - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி


நாடாளுமன்ற தேர்தலில் எங்கள் தலைமையில் தான் கூட்டணி அமையும் -  ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
x

ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை சென்னையில் இன்று காலை 10 மணிக்கு கூட்டினார்

சென்னை,

சென்னை நாடாளுமன்ற தேர்தல் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில் யார் உண்மையான அ.தி.மு.க. என்ற சண்டை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இடையே நீடித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை சென்னையில் இன்று காலை 10 மணிக்கு கூட்டினார் சென்னை வேப்பேரி ரிதர்டன் சாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திருமண மண்டபத்தில் இந்த் கூட்டம் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர் செல்வம் கூறியதாவது ,

ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டிய தருணம் இது.நாடாளுமன்ற தேர்தலில் எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் முடிவெடுக்கப்படும்.நாடாளுமன்ற தேர்தலில் எங்கள் தலைமையில் தான் கூட்டணி அமையும்தேர்தல் ஆணையமும், நீதிமன்றமும் எங்களுக்கு தான் இரட்டை இலை சின்னத்தை வழங்கும் .

தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்ட வரவு செலவு கணக்கு, நான் பொருளாளராக இருந்தபோது கொடுத்தது.பொதுக்குழு முறையாக நடைபெறும், அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும்.இறுதி வெற்றி எங்களுக்கு தான். இணைய கூடாது என்ற எண்ணம் ஈபிஎஸ்-க்கு மட்டும் தான் உள்ளது. என கூறினார்.


Next Story