காவிரியில் இருந்து தமிழகத்திற்கு வரும் நீரின் அளவு கடும் சரிவு


காவிரியில் இருந்து தமிழகத்திற்கு வரும் நீரின் அளவு கடும் சரிவு
x

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின் அளவு குறைந்ததால், கர்நாடக அனைகளுக்கு வரும் நீரின் அளவும் குறைந்துள்ளது.

ஒகேனக்கல்,

காவிரியில் இருந்து கடந்த வாரம் ஒகேனக்கல் பிலிகுண்டுலுவுக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான கன அடி நீர் தமிழகம் நோக்கி வந்துகொண்டிருந்தது. இந்த நிலையில், தற்போது ஒரே வாரத்தில் அடியோடு சரிந்து 19 ஆயிரம் கன அடியாக சரிந்துள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின் அளவு குறைந்ததால், கர்நாடக அனைகளுக்கு வரும் நீரின் அளவும் குறைந்துள்ளது. இதன் காரணமாக உபரி நீர் வெளியேற்றம் முழுவதுமாக குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த 17 நாட்களாக ஒகேனக்கலில் பரிசல் இயக்கவும், மீன் பிடிக்கவும், பொதுமக்கள் ஆற்றில் இறங்கவும், மற்றும் சுற்றுலாப்பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story