தீக்குளித்தவர் சாவு


தீக்குளித்தவர் சாவு
x

வேதாரண்யம் அருகே தீக்குளித்தவர் சாவு

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறையை சேர்ந்தவர் ஆறுமுகம்(வயது42). இவரது அண்ணன் முருகன் ஏற்கனவே இறந்துவிட்டார். தற்போது முருகனின் மனைவி பாத்திமா உடல்நலம் சரியில்லாமல் உள்ளார். இந்தநிலையில் ஆறுமுகத்திடம், பாத்திமா தனக்குரிய சொத்தில் பங்கு வேண்டும் அல்லது அதற்குரிய பணம் வேண்டும் என கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆறுமுகம் மண்எண்ெணய்யை ஊற்றி தீவைத்து கொண்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு நாகை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Related Tags :
Next Story