போலீஸ் எனக்கூறி வீட்டின் கதவை தட்டிய ஆசாமி சிக்கினார்


போலீஸ் எனக்கூறி வீட்டின் கதவை தட்டிய ஆசாமி சிக்கினார்
x

அருப்புக்கோட்டையில் சுற்றுச்சுவர் ஏறி குதித்து போலீஸ் எனக்கூறி வீட்டின் கதவை தட்டிய ஆசாமி சிக்கினார்.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டையில் சுற்றுச்சுவர் ஏறி குதித்து போலீஸ் எனக்கூறி வீட்டின் கதவை தட்டிய ஆசாமி சிக்கினார்.

வீட்டிற்குள் நுழைந்தார்

அருப்புக்கோட்டை எம்.டி.ஆர். நகர் வடக்கு 2-வது தெருவில் வசித்து வருபவர் சவுந்தரபாண்டியன். இவர் சமையல் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சாந்தி. இந்தநிலையில் நேற்று அதிகாலை அவரது வீட்டின் சுற்றுச்சுவரை ஏறி குதித்த மர்மநபர் வீட்டிற்குள் நுழைந்தார்.

பின்னர் கதவை தட்டினார். அப்போது அவர் போலீஸ் இருப்பதாகவும், விரைவாக கதவை திறக்கும் படியும் கூறியுள்ளார்.

ஆனால் கதவை யாரும் திறக்காததால் மாறி, மாறி அந்த நபர் வேகமாக கதவை தட்டியுள்ளார். அப்போது சவுந்தரபாண்டியனின் மகள் கதவை திறக்க முயன்ற போது எதிர் வீட்டில் வசிக்கும் நபர் ஒருவர் இதைப்பார்த்து சந்தேகம் அடைந்து அவரை யார் என்று கேட்டுள்ளார்.

போலீசில் ஒப்படைத்தனர்

இதனால் சுதாரித்துக்கொண்ட அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றுள்ளார். அதற்குள் அந்த மர்ம நபரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபகுதியில் கடந்த ஜூலை மாதம் ஆசிரியர் தம்பதியை ெகாலை செய்து விட்டு நகைைய திருடி சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:- அருப்புக்கோட்டை பகுதியில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரட்டை கொலை நடந்த வீட்டின் அருகே மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது எங்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. எனவே இந்த பகுதியில் போலீசாரின் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றனர்.


Next Story