கஞ்சா வழக்கில் கைது செய்யப்படுபவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்


கஞ்சா வழக்கில் கைது செய்யப்படுபவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்
x

கஞ்சா வழக்கில் கைது செய்யப்படுவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா தெரிவித்தார்.

திருப்பத்தூர்

கஞ்சா வழக்கில் கைது செய்யப்படுவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா தெரிவித்தார்.

விழிப்புணர்வு குறுந்தகடு

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் போதை பொருள் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு, போதைக்கு எதிரான போர் எனும் தலைப்பில் குறுந்தகடு வெளியிடும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா கலந்துகொண்டு போதை பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்தும், குற்றச்செயல்களில் எவ்வாறெல்லாம் ஈடுபடுகிறார்கள் என்பது குறித்த வீடியோ குறுந்தகடை வெளியிட்டா.

அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சொத்துக்கள் பறிமுதல்

மாவட்டம் முழுவதும் அனைத்து போலீஸ் நிலையங்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் இந்த விழிப்புணர்வு குறுந்தகடு மூலம் போ போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். புதிய போலீஸ் சூப்பிரண்டு அலுவலக கட்டிட பணிகள் செப்டம்பர் மாத இறுதிக்குள் முடிக்கப்பட்டு விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது போதைப் பழக்கத்தால் கல்லூரி மாணவர்கள் முதல் சிறுவர்கள் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதற்காக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு கஞ்சா ஆபரேஷன் என்ற யுத்தியை கையாண்டு தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் போதை தடுப்பு பணிகளில் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கஞ்சா வழக்கில் கைது செய்யப்படுவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள், மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகி தங்களது வாழ்க்கையை சீரழித்துக்கொள்ள வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் உடன் இருந்தனர்.


Next Story