ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவி இயக்குனர் திடீர் ஆய்வு


ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவி இயக்குனர் திடீர் ஆய்வு
x

ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவி இயக்குனர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குனர் விஜயகுமாரி ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து ஆலங்காயம் ஒன்றியத்துக்குட்பட்ட 27 ஊராட்சிகளிலும் பணியாற்றி வரும் ஊராட்சி செயலாளர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு வரவு செலவு, வரி வசூல், திட்டப்பணிகள், 15-வது நிதி குழு மானியம், பணிகள் முன்னேற்றம், பயன்படுத்தப்படாத மின் இணைப்புகள் துண்டிப்பு, கிராமப் பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டை அறவே ஒழிப்பது மற்றும் பதிவேடு பராமரித்தல் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுமார் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story