ஆசிரியர் மர்ம சாவு


ஆசிரியர் மர்ம சாவு
x

ஆலங்குடி அருகே ஆசிரியர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை

ஆசிரியர் மர்ம சாவு

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தாலுகா நாட்டாணிக்கோட்டை வடக்கு பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் மகன் வேலுச்சாமி (வயது 34). இவர் கொன்றைக்காடு அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். மேலும் இவர் கடந்த 12-ந்தேதி முதல் பள்ளிக்கு செல்லாமல் விடுமுறை எடுத்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பகுதியில் இவர் சுற்றித்திரிந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆலங்குடி அரசமரம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள சாலையில் ஆசிரியர் வேலுச்சாமி தரையில் உட்கார்ந்தபடியே இறந்த நிலையில் இருந்தார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவர் போதையில் உட்கார்ந்து இருக்கிறார் என நினைத்தனர். ஆனால் வெகுநேரமாக அவர் அசையாமல் இருந்ததையடுத்து சந்தேகம் அடைந்து அருகே சென்று பார்த்தபோது அவர் இறந்தது தெரியவந்தது.

போலீசார் விசாரணை

பின்னர் இதுகுறித்து ஆலங்குடி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் ஆசிரியர் உடலை கைப்பற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் வேலுச்சாமியின் சாவுக்கு காரணம் என்ன? அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story