ரூ.3¾ கோடி நிலுவை தொகையை உடனே கட்ட வேண்டும்


ரூ.3¾ கோடி நிலுவை தொகையை உடனே கட்ட வேண்டும்
x
தினத்தந்தி 7 Nov 2022 12:15 AM IST (Updated: 7 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய ரூ.3¾ கோடி நிலுவை தொகையை உடனே செலுத்த வேண்டும் என்று கலெக்டர் லலிதா அறிவுறுத்தினார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய ரூ.3¾ கோடி நிலுவை தொகையை உடனே செலுத்த வேண்டும் என்று கலெக்டர் லலிதா அறிவுறுத்தினார்.

300 கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள்

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் உரிமம் பெற்று "அனலாக் முறையில்" கேபிள் டி.வி. சேவையை வழங்கியதற்காக, அரசுக்கு செலுத்தவேண்டிய அனலாக் தொகையினை நிலுவை வைத்துள்ள உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மீது வருவாய் வசூல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் மூலம் அனலாக் முறையை பயன்படுத்தி பதிவுசெய்த 300 உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் வாயிலாக பொதுமக்களுக்கு கேபிள் டி.வி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அரசு கேபிள் டி.வி. சந்தாதாரர்களுக்கு மாதச்சந்தா தொகையாக ரூ.70 நிர்ணயம் செய்யப்பட்டு, அதில் அரசின் பங்காக ரூ.20 உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மூலம் அரசுக்கு செலுத்தப்பட வேண்டும்.

ரூ.3¾ கோடி நிலுவை தொகை

மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்சமயம் சுமார் 300 உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டராக பணிபுரிந்து, தனியார் நிறுவன இணையதள கேபிள் சேவைக்கு சென்றுவிட்ட ஆபரேட்டர்கள் அரசுக்கு முறையாக சந்தா செலுத்தாமல் ரூ.3 கோடியே 72 லட்சத்து 93 ஆயிரத்து 595 நிலுவை வைத்துள்ளனர்.அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையினை உடனடியாக செலுத்த உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கு இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறு செலுத்ததவறும் பட்சத்தில் நிலுவை தொகையினை தமிழ்நாடு வருவாய் வசூல் சட்டம் 1864 பிரிவு 5-ன்படி வசூல் செய்திட போலீசார் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story