நெல்லையில் பேட்டரி வெடித்து ஆட்டோ தீப்பிடித்து எரிந்தது


நெல்லையில் பேட்டரி வெடித்து ஆட்டோ தீப்பிடித்து எரிந்தது
x

நெல்லையில் பேட்டரி வெடித்து ஆட்ேடா தீப்பிடித்து எரிந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருநெல்வேலி

நெல்லையில் பேட்டரி வெடித்து ஆட்ேடா தீப்பிடித்து எரிந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பயணிகள் ஆட்டோ

நெல்லை மேலப்பாளையம் அழகிரிபுரத்தை சேர்ந்தவர் ராஜ். இவருடைய மகன் அருள் சுதாகர் (வயது 31). இவர் பயணிகள் ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவில் சவாரிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய அவர் தனது வீட்டின் முன்பு ஆட்டோவை நிறுத்திவிட்டு தூங்க சென்றார்.

நேற்று அதிகாலையில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி வெடிப்பது போல் கேட்டது. இதனால் வீட்டில் தூங்கி கொண்டு இருந்த அருள்சுதாகர் உள்ளிட்டவர்கள் திடுக்கிட்டு எழுந்து வெளியே வந்து பார்த்தனர்.

தீப்பிடித்து எரிந்தது

அப்போது ஆட்டோ தீப்பற்றி எரிந்து கொண்டு இருந்தது. இதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். எனினும் அருள்சுதாகர், குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் துரிதமாக செயல்பட்டு தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். எனினும் ஆட்டோவின் முன்இருக்கை, கண்ணாடிகள் சேதம் அடைந்தது.

இதுகுறித்து உடனடியாக மேலப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் (கிழக்கு) சீனிவாசன், இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், தடய அறிவியல் துறை நிபுணர்கள் வந்து ஆய்வு செய்தனர்.

பேட்டரி வெடிப்பு

முதற்கட்ட விசாரணையில், ஆட்டோவில் டிரைவர் சீட்டுக்கு அடியில் இருந்த பேட்டரி வெடித்து விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ெதாடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நெல்லையில் பேட்டரி வெடித்து ஆட்ேடா தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story