விவசாயியை கடித்து குதறிய கரடி
வாணியம்பாடி அருகே விவசாயியை கரடி கடித்து குதறியது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக -ஆந்திர எல்லையில் திம்மாம்பேட்டை அருகே லட்சுமிபுரம் உள்ளது. இந்த பகுதியிலும், சுற்றுபகுதிகளிலும் கடந்த ஒரு மாதமாக ஒரு பெரிய கரடி மற்றும் இரண்டு குட்டி கரடிகள் சுற்றி திரிகிறது.
இந்த நிலையில் காலைக்கடன் கழிப்பதற்காக கிணத்துக்காணாறு பகுதியைச் சேர்ந்த விவசாயி காமராஜ் (வயது 55) என்பவர் காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த கரடி விவசாயி காமராஜை தாக்கி கடித்து குதறியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவர் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து திம்மாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story