சிறந்த போலீஸ் நிலையம் இரணியல்
குமரி மாவட்டத்தின் சிறந்த போலீஸ் நிலையமாக இரணியல் தேர்வு செய்யப்பட்டது. இதற்காக முதல்-அமைச்சா் கேடயத்தை டி.ஜி.பி. சைலேந்திரபாபு வழங்கி பாராட்டினார்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தின் சிறந்த போலீஸ் நிலையமாக இரணியல் தேர்வு செய்யப்பட்டது. இதற்காக முதல்-அமைச்சா் கேடயத்தை டி.ஜி.பி. சைலேந்திரபாபு வழங்கி பாராட்டினார்.
சிறந்த போலீஸ் நிலையம் இரணியல்
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் உள்ள போலீஸ் நிலையங்களின் சிறந்த செயல்பாடுகள், புலன் விசாரணை உள்பட பல்வேறு செயல்பாடுகளின் அடிப்படையில் சிறந்த போலீஸ் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதன்படி குமரி மாவட்டத்தில் இருந்து இரணியல் போலீஸ் நிலையம் சிறந்த போலீஸ் நிலையமாக தேர்வு செய்யப்பட்டது.
சிறந்த போலீஸ் நிலையங்களுக்கு முதல்-அமைச்சர் கேடயம் வழங்க பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி கேடயம் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு கலந்து கொண்டு சிறந்த போலீஸ் நிலையங்களுக்கு கேடயம் வழங்கினார்.
கேடயம் வழங்கிய டி.ஜி.பி.
அதன்படி குமரி மாவட்டத்தில் சிறந்த போலீஸ் நிலையமாக தேர்ந்து எடுக்கப்பட்ட இரணியல் போலீஸ் நிலையத்திற்கான கேடயத்தை இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமாரிடம் டி.ஜி.பி. சைலேந்திர பாபு வழங்கி பாராட்டினார்.
அதைத்தொடர்ந்து சிறந்த போலீஸ் நிலையம் என்ற பெயரை பெற சிறப்பாக பணியாற்றிய இரணியல் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாருக்கு குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹாிகிரண் பிரசாத் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.